■ ஒலிம்பிக் பாதைகள் இன்று முதல் மீண்டும் திறப்பு..!
22 ஆவணி 2024 வியாழன் 06:38 | பார்வைகள் : 3787
ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட பாதைகள், இன்று ஓகஸ்ட் 22 ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளின் போது பிரத்யேகமாக வீதிகளில் ஒரு பகுதி ஒலிம்பிக் பாதை ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 11 ஆம் திகதி நிறைவடைந்ததும் மறுநாள் வீதிகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பரா ஒலிம்பிக் போட்டிகள் வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில், ஒரு வாரத்துக்கு முன்னதாக இன்று முதல் RN13 நெடுஞ்சாலையின் Porte Maillot தொடக்கம் La Défense வரையான வீதியில் 'ஒலிம்பிக் பாதை' திறக்கப்பட்டுள்ளது. அப்பகுதியினூடாக பயணிக்க வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்சுக்குள் மொத்தமாக 185 கிலோமீற்றர்கள் தூரம் இந்த வீதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்கான உணவு விநியோகம், அவசரகால பயணங்கள், நோயாளர் காவு வண்டி போன்றவை பயணிக்க இந்த பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை மீறி அதில் பயணிப்பவர்களுக்கு முதல்கட்டமாக €135 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.