காட்டுப்பன்றிக்கு வைத்த இலக்கு.. வேட்டைக்காரர் பலி..!

22 ஆவணி 2024 வியாழன் 08:54 | பார்வைகள் : 8523
காட்டுப் பன்றி ஒன்றை வேட்டையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வேட்டைக்காரர் ஒருவர் சிக்கி பலியாகியுள்ளார்.
தெற்கு பிரான்சின் Gard மாவட்டத்தில் உள்ள Sauve எனும் சிறு காட்டுப்பகுதியில் இச்சம்பவம் நேற்று ஓகஸ்ட் 21, புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. 53 வயதுடைய வேட்டைக்காரர் ஒருவரே பலியாகியுள்ளார். காட்டுப் பன்றி ஒன்றை சுடுவதாக நினைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த நபர் பலியாகியுள்ளார். எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் முழுமையான விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
காலை 9 மணிக்கு தீயணைப்பு படையினர் எச்சரிக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது.
முதல்கட்ட விசாரணைகளில், மூன்றாவது நபரின் தலையீடு எதுவும் இதில் இருப்பதாக உறுதிப்படுத்தமுடியவில்லை எனவும், அவரது உடம்பில் இருந்த துப்பாக்கி குண்டு அவரது துப்பாக்கியினுடையது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1