Paristamil Navigation Paristamil advert login

சினிமாவில் அறிமுகமாகும் சீரியல் நடிகை!

 சினிமாவில் அறிமுகமாகும் சீரியல் நடிகை!

22 ஆவணி 2024 வியாழன் 10:25 | பார்வைகள் : 4311


சினிமா படங்களை போன்று சின்ன திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதன்படி நடிகை ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் ஆகியோர் சீரியல்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

சின்னத்திரை நடிகர், நடிகைகளை ரசிகர்கள் தங்கள் வீட்டில் ஒருவராக எண்ணி கொண்டாடுகின்றனர்.அந்த வகையில் விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி என்ற மெகா சீரியல் 2021 ஆம் ஆண்டு தொடங்கியது.

மொத்தம் 89 எபிசோடுகளை கொண்ட இந்த மெகா சீரியல் 2023 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தது.இதில் நடித்த நடிகை பிரியங்கா ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.இன்ஸ்டாகிராமில் அவருக்கு இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.இந்நிலையில் பிரியங்காவுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தூர தீர யான என்ற கன்னட படத்தில் நடித்த வாய்ப்பை பெற்றுள்ளார் பிரியங்கா.இதனையொட்டி அவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்