செங்கடலில் தாக்குதலுக்குள்ளாகிய வணிகக் கப்பல் - பிரித்தானிய ராணுவம்
22 ஆவணி 2024 வியாழன் 10:29 | பார்வைகள் : 2215
காசா பகுதியில் நடந்து வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரின் நடுவே கப்பல்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது இந்த தாக்குதலை நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
செங்கடல் வழியாக பயணித்த வணிகக் கப்பல் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வணிகக் கப்பல் மிதந்து எரிகிறது என பிரித்தானிய ராணுவம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய ராணுவத்தின் ஐக்கிய ராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் கூறுகையில், "கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுக நகரமான ஹொடெய்டாவிற்கு மேற்கே 140 கிலோமீற்றர் தொலைவில், சிறிய படகுகளில் வந்தவர்கள் முதலில் சிறிய ஆயுதங்களுடன் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
நான்கு எறிகணைகளும் கப்பலைத் தாக்கின. ஆனால் டிரோன்களா அல்லது ஏவுகணைகளா என்பது உடனடியாக தெரியவில்லை.
இந்த தாக்குதலில் உயிரிழப்பு இல்லை. மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர்" என தெரிவித்துள்ளது.