Paristamil Navigation Paristamil advert login

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்

22 ஆவணி 2024 வியாழன் 10:48 | பார்வைகள் : 686


பொதுவாகவே, சக்கரவள்ளிக் கிழங்கை நாம் வெறுமனே அவித்து தான் சாப்பிட்டு வது வழக்கம். ஆனால் அதில் வறுவல் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? ஒருவேளை அப்படி நீங்கள் சாப்பிடவில்லை என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு வறுவல் சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் அருமையாக இருக்கும். முக்கியமாக, இது ஆரோக்கியமானதும் கூட. 

சொல்லப்போனால் இது மீன் வறுவலை விட அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த சர்க்கரை வழக்கு கிழங்கு வறுவல் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இதை ரொம்பவே விரும்பி சாப்பிடுபவர்கள்.இந்த வறுவலை நீங்கள் சாம்பார் சாதம், குழம்பு சாதத்திற்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சர்க்கரைவள்ளி கிழங்கு வறுவல் செய்ய தேவையான பொருட்கள் :
சர்க்கரைவள்ளி கிழங்கு -5
பெரிய வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல் செய்யும் முதலில், கிழங்கை நன்கு தண்ணீரில் கழுவி பிறகு அதை குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுமார் 3 விசில் வைத்து இறக்கவும். குக்கரில் விசில் போனதும் கிழங்கில் தோல் உரித்து அதை வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தும் பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் சர்க்கரை வலிக்கிழங்கை சேர்த்து கொள்ளுங்கள்.இதனுடன் உப்பு, மிளகாய் தூள், சாம்பார் பொடி  ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி போட்டு வதக்கவும். கிழங்கு பொன்நிறமாக வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் டேஸ்ட்டான சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல் தயார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்