Paristamil Navigation Paristamil advert login

கமலா ஹரிஸிற்கு ஆதரவை வெளியிட்ட கிளின்டன் - மகிழ்ச்சியின் ஜனாதிபதி என தெரிவிப்பு

கமலா ஹரிஸிற்கு ஆதரவை வெளியிட்ட கிளின்டன் - மகிழ்ச்சியின் ஜனாதிபதி என தெரிவிப்பு

22 ஆவணி 2024 வியாழன் 15:50 | பார்வைகள் : 4683


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹரிசிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டன் மகிழ்ச்சியின் ஜனாதிபதிக்கு  அமெரிக்க ஜனாதிபதி வாக்களிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எங்களிற்கு மகிழ்ச்சியின் ஜனாதிபதிகமலா ஹரிஸ் தலைமை தாங்கவேண்டிய தேவையுள்ளது,நான் எனது கடமையை செய்கின்றேன் நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 42 வது ஜனாதிபதியான பில்கிளின்டன் அமெரிக்கா மேலும் அதிகளவிற்கு அனைவரையும் உள்வாங்குவதாகவும், அதிகளவிற்கு எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துவதாகவும் மாறவேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

பல சந்தர்ப்பங்கள் வாய்ப்புகள் காணப்படுகின்ற சூழலில் பலபிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டிய நிலையில் அர்த்தமற்ற சொல்லாட்சிகளில் நாங்கள் சிக்குண்டு கிடப்பது எங்கள் மீதான எவ்வளவு பெரும் சுமை என்பதை நீங்கள் சிந்தித்து பாருங்கள், என வேண்டுகோள் விடுத்துள்ள பில்கிளின்டன், கமலா ஹரிஸ் தலைமை தாங்கும் அமெரிக்காவை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்