Paristamil Navigation Paristamil advert login

பேருந்து பரிசோதனைகளில் மோசடி செய்ததா RATP..? - பரிசியன் பத்திரிகை கிளப்பிய சர்ச்சை..!

பேருந்து பரிசோதனைகளில் மோசடி செய்ததா RATP..? - பரிசியன் பத்திரிகை கிளப்பிய சர்ச்சை..!

23 ஆவணி 2024 வெள்ளி 05:09 | பார்வைகள் : 3306


பேருந்துகளில் தொழில்நுட்ப பரிசோதனைகளில் RATP நிறுவனம் மோசடி செய்ததாக லு பரிசியன் பத்திரிகை வெளியிட்ட குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்துகளின் ’டாஷ்போர்ட்’ (tableau de bord) பகுதியில் சிறிய  எச்சரிக்கை விளக்குகள் இருப்பது அறிந்ததே. பேருந்துகளில் உள்ள குறைகளை அடையாளம் காட்டுவதற்காக இந்த விளக்குகள் பேருந்துகளில் அமைக்கப்படும். RATP இற்கு சொந்தமான பேருந்துகளை தொழில்நுட்ப பரிசோதனைகளுக்கான அனுப்பும் போது, அதில் இருக்கும் அனைத்து ‘எச்சரிக்கை’ விளக்குகளையும் அணைத்துவிட்டு கொண்டுசெல்வதாக பரிசியன் பத்திரியை குற்றம் சாட்டியுள்ளது. 

ஓகஸ்ட் 21, புதன்கிழமை வெளியிட்ட பதிப்பில் இந்த குற்றச்சாட்டுகளை அடுக்கி, பேருந்துகள் அவ்வப்போது தீப்பிடித்து எரிவதற்கும், பழுதடைந்து நடுவீதியில் நிற்பதற்கும் இதுபோன்ற மோசடி செயல்களே காரணம் எனவும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. 

இந்த செய்தி RATP மட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை RATP இன் ஊடகப்பேச்சாளர் Jimmy Brun இது தொடர்பில் தெரிவிக்கையில், ‘இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு. எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பே முன்னுரிமையாகும். இந்த முன்னுரிமை பேருந்துகளுக்கும் பொருந்தும்!’ என அவர் தெரிவித்தார்.

‘பேருந்து பரிசோதகர் பேருந்தினை சோதனையிடுவதற்கு என பல்வேறு கருவிகளும், வழிமுறைகளும் வைத்திருப்பார். tableau de bord இல் இருக்கும் சமிக்ஞைகளை பார்த்து அறிந்துகொள்வது அல்ல. பேருந்தில் இருந்துக்கும் tableau de bord இனால், அதுபோன்று சமிக்ஞை விளக்குகளை அணைக்க முடியாது.’ என ஊடக பேச்சாளர் Jimmy Brun  வாதிட்டார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்