Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மாணவர்கள் துஷ்பிரயோகம் - அதிபர் கைது

இலங்கையில் மாணவர்கள் துஷ்பிரயோகம் - அதிபர் கைது

23 ஆவணி 2024 வெள்ளி 14:34 | பார்வைகள் : 11748


கதிர்காமம், கோதமிபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் கதிர்காமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பாடசாலையில் மூன்று சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அதிபரால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவர் ஒருவர் தனது வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், மேலும் இரண்டு சிறுவர்களும் தாங்களும் இதுபோன்ற துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் படி, அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இச்சம்பவத்தை மூடி மறைக்க சில குழுக்கள் செயற்படுவதாக அந்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்