Paristamil Navigation Paristamil advert login

விஜய்சேதுபதியின் அடுத்த படம் குறித்து அதிரடி அறிவிப்பு..!

விஜய்சேதுபதியின் அடுத்த படம் குறித்து அதிரடி அறிவிப்பு..!

23 ஆவணி 2024 வெள்ளி 14:43 | பார்வைகள் : 780


விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ’ட்ரெயின்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருவதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் சில முக்கிய தகவல்களை பிரபல பிஆர்ஓ நிகில் முருகன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் நித்யா மேனன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் தேசிய விருது பெற்ற நித்யா மேனன் இந்த படத்தில் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த படம் குறித்து மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்