Paristamil Navigation Paristamil advert login

குரங்கு அம்மையின் அறிகுறிகள் என்ன? தடுக்கும் வழிகள் என்ன?

குரங்கு அம்மையின் அறிகுறிகள் என்ன?  தடுக்கும் வழிகள் என்ன?

23 ஆவணி 2024 வெள்ளி 14:55 | பார்வைகள் : 1339


குரங்கு அம்மை தற்போது பரவி வருவதாக தகவல்கள் வெளியாவதால்  மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுடன்  தொடர்பில் இருந்தால்  அந்த நோய் உங்களுக்கும் பரவும். நோய் பாதித்தவர்கள் உபயோகம் செய்த பொருட்களை பயன்படுத்தினாலும் பரவுகிறது. 

அண்மையில் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் கிட்டத்தட்ட 16 ஆயிரத்து 700 பேர் குரங்கு அம்மை (Mpox) என்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த தொற்றின் தீவிரத்தால் இதுவரை அங்கு 570 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நோய் 1958 ஆம் ஆண்டில் முதல் முறையாக டென்மார்க்கில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் இது புதிய நோய் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.நாமும் குரங்கு அம்மை அறிகுறிகளை தெரிந்து கொண்டால் தானே கவனமாக இருக்க முடியும். அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம். 


உடலில் சீழ் வடியும்  கொப்புளங்கள்
கடும் காய்ச்சல்
பயங்கரமான தலைவலி
தசைகளில் வலி
கடும் முதுகு வலி
பலவீனமாக உணர்தல்
தொண்டை வலி, வீக்கம்

குரங்கு அம்மை தாக்காமல் தடுக்க இப்போது வரை  தடுப்பூசி ஏதும் தயாரிக்கப்படவில்லை. ஆகவே அதை கட்டுப்படுத்துவது இன்னும் கடினமாக தான் இருக்கிறது. ஆனாலும் குரங்கு அம்மை அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் ஆரம்ப கட்டத்திலே மருத்துவரை அணுகுவது நல்லது. தொடக்கத்திலே சிகிச்சை எடுத்து கொண்டால் குணமடைய வாய்ப்புள்ளது. 

குரங்கு அம்மையை தவிர்க்க உலக சுகாதார அமைப்பு சில விஷயங்களை அறிவுத்தியுள்ளது. நோய்வாய்ப்பட்டு சுற்றி திரியும் விலங்குகள், உயிரிழந்த விலங்குகளை  தொடுவதையும், அதன் இறைச்சியை சாப்பிடுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.  
குரங்கு அம்மை பாதிப்புள்ள  நபரிடமிருந்து விலகி இருக்க வேண்டும். 
நோய் வாய்ப்பட்ட நபர் உபயோகம் செய்த  பொருட்களை பயன்படுத்தக் கூடாது. 
 உடலுறவு வைத்து கொள்ளும்போது பாதுகாப்பு முறையை கட்டாயம் பின்பற்றுங்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்