Paristamil Navigation Paristamil advert login

வெண்டைக்காய் மோர் குழம்பு

வெண்டைக்காய் மோர் குழம்பு

23 ஆவணி 2024 வெள்ளி 15:26 | பார்வைகள் : 344


வெயில் காலத்தில் என்ன சமைத்து கொடுத்தாலும் அதிலும் காரமாக செய்தால் வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு குறை சொல்லுவார்கள். அதற்கு முக்கிய காரணம் வெயிலின் தாக்கம் தான். அதனாலேயே பலர் குளுமையான உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். அதில் முக்கியமான ஒன்று தயிர் மற்றும் மோர். தயிர் மற்றும் வெண்டைக்காய் வைத்து சுவையான மோர் குழம்பு எப்படி  செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

தயிர்

¼ கிலோ வெண்டைக்காய்

துருவிய தேங்காய்

நெல்லிக்காய் அளவு புளி

50 கிராம் கொத்தமல்லி விதைகள்

100 கிராம் துவரம் பருப்பு

100 கிராம் கடலை பருப்பு

6 பச்சை மிளகாய்

ஒரு துண்டு இஞ்சி

6 வத்தல்

10 கிராம் சீராகம்

2 ஸ்பூன் மஞ்சள் தூள்

தேவைக்கேற்ப பெருங்காயம்

சுவைக்கேற்ப உப்பு

தாளிக்க தேவையானவை :

தேங்காய் எண்ணெய்

1 ஸ்பூன் கடுகு

சிறிதளவு கருவேப்பிலை


செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் கொதமல்லி விதை, கடலை பருப்பு, துவரம் பருப்பு, சீரகம், வத்தல் ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் புளியை தண்ணீர் ஊற்றி ஊறவைத்து அதை நன்றாக கரைத்து கொள்ளவும்.

தற்போது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து புளி கரைசலை சேர்த்து அதனுடன் நறுக்கிய வெண்டைக்காய், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் தயிரை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்து அதனுடன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு மற்றும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து கலந்து வைத்துள்ள மோரை சேர்த்து அதில் வெண்டைக்காய் போட்டு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

மோர் குழம்பு கொதித்து நுரை கட்டி வந்தவுடன் அடிப்பை அணைத்து விடவும்.

பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதை மோர் குழம்பில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்