பரிஸ் தேவாலயங்களில் - ஒரே நேரத்தில் காண்டாமணி ஒலி..!
23 ஆவணி 2024 வெள்ளி 16:40 | பார்வைகள் : 3925
பரிசில் உள்ள தேவாலயங்களில் நாளை ஒரே நேரத்தில் காண்டாமணி ஒலிக்கவிடப்பட உள்ளது.
ஓகஸ்ட் 24, சனிக்கிழமை இரவு 9 மணிக்கு பரிசில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இந்த காண்டாமணி ஒலிக்கவிடப்பட உள்ளது. Notre Dame de Paris தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1944 ஆம் ஆண்டு பரிஸ் விடுதலையின் ( libération de Paris) 80 ஆவது ஆண்டு நினைவாக இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1944.08.24 அன்று பொதுவான நாளாக அன்றைய நாளில் இது போல் தேவாலயங்களில் காண்டாமணி ஒலிக்கவிடப்பட்டிந்தது.
தற்போதும் அதேபோன்று காண்டாமணி ஒலிக்கவிடப்பட உள்ளதாக பரிஸ் தேவாலயங்களுக்கான திருச்சபை அறிவித்துள்ளது.
ஓகஸ்ட் 25, 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.