Essonne : சரமாரி துப்பாக்கிச்சூட்டில் இரு இளைஞர்கள் காயம்!

23 ஆவணி 2024 வெள்ளி 18:08 | பார்வைகள் : 12006
நேற்று வியாழக்கிழமை இரவு Essonne மாவட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
Les Ulis நகரில் இச்சம்பவம் நள்ளிரவு 1.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. மூன்றில் இருந்து ஐந்துவரையான நபர்கள் இணைந்து குறித்த இரு இளைஞர்களை நெருங்கியுள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர் இளைஞர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் இரு இளைஞர்களும் காயமடைந்துள்ளனர். 18 மற்றும் 19 வயதுடைய இருவரே காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் உயிருக்காபத்தான நிலையிலும் இரண்டாமவர் சிறிய காயங்களுக்கு உள்ளான நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆயுததாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிராந்திய குற்றப்பிரிவு (Division de la criminalité territoriale) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025