சூர்யா, வெற்றி மாறன் இணையும் வாடிவாசல் விரைவில் தொடங்குகிறதா?

4 புரட்டாசி 2023 திங்கள் 15:26 | பார்வைகள் : 7925
சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பாகவே வெளியாகி இருந்தது. அதற்காக சூர்யா காளைகளை அடக்கும் பயிற்சியை மேற்கொண்டு வந்தார். படத்திற்கான சோதனை படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டது. மேலும் சில நாட்களுக்கு முன்பாக இயக்குனர் வெற்றிமாறன் ரோபோ காலை ஒன்றை தயார் செய்து வருவதாகவும் அதற்கான பணிகள் லண்டனில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வாடிவாசல் படத்திற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிமாறன் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் மாதத்திற்கு ஒரு முறை லண்டன் சென்று அதனை கவனித்து வருவதாக தெரிய வந்துள்ளது. வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு விரைவில் வாடிவாசல் படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா 43 படத்திற்கு முன்பாகவே இந்த திட்டம் தொடங்கும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1