Paristamil Navigation Paristamil advert login

மாரி செல்வராஜின் அடுத்த படத்தின் நாயகன் இந்த பிரபலமா?

மாரி செல்வராஜின்  அடுத்த படத்தின் நாயகன் இந்த பிரபலமா?

24 ஆவணி 2024 சனி 08:51 | பார்வைகள் : 821


மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் நாயகன் குறித்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’வாழை’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவர் தற்போது துருவ் விக்ரம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பைசன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 75% முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படம் ஒட்டுமொத்தமாக முடிந்து விடும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அவரே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ’பைசன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனுஷ் - மாரி செல்வராஜ் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் உடனே படப்பிடிப்பும் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்