இனிப்பு கொழுக்கட்டை...
24 ஆவணி 2024 சனி 09:13 | பார்வைகள் : 773
விநாயகர் சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருவது கொழுக்கட்டை தான். அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில் அனைத்து வயதினரும் ருசித்து சாப்பிடும் வகையில் சுவையான இனிப்பு கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
1 கப் அரிசி மாவு
150 கிராம் வெல்லம்
100 கிராம் வேர்க்கடலை
1 மூடி துருவிய தேங்காய்
½ ஸ்பூன் ஏலக்காய் பொடி
தேவையான அளவு நெய்
சுவைக்கேற்ப உப்பு
செய்முறை :
முதலில் வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றும் பாதியாக அரைத்து தனியே வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும் துருவிய தேங்காய், அரைத்த வேர்க்கடலை மற்றும் வெல்ல பாகு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
இவை கொஞ்சம் கெட்டியாக மாறியவுடன் அதில் மீதமுள்ள நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பூரணத்தை இறக்கி வைக்கவும்.
தற்போது அரிசி மாவில் சுடுதண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் தேவையான அளவு மாவை எடுத்து வட்டமாக தேய்த்து அதனுள் பூரணத்தை வைத்து ஓரங்களை மடித்துவிடவும்.
அடுத்து பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டையை இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்தால் சுவையான இனிப்பு கொழுக்கட்டை சாப்பிட ரெடி.