Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு குடியுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட நபர்..!

பிரெஞ்சு குடியுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட நபர்..!

24 ஆவணி 2024 சனி 10:12 | பார்வைகள் : 3973


2017 ஆம் ஆண்டில் பிரெஞ்சு இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட ஒருவர், பிரெஞ்சு குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளார்.

1998 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7 ஆம் திகதி பிறந்த 26 வயதுடைய Mamoye D என்பவரது குடியுரிமையே பறிக்கப்பட்டுள்ளதாக, இன்று ஓகஸ்ட் 24 ஆம் திகதி சனிக்கிழமை வெளியான அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 5, 2017 ஆம் ஆண்டு அவர் 19 வயதில் இருக்கும் போது ஈஃபிள் கோபுரத்தில் கண்காணிப்பின் நின்றிருந்த ஊர்காவற்படையினரை ( l'opération Sentinelle ) ‘அல்லா ஹூ அக்பர்’ என கோஷமிட்டவாறே தாக்குதல் மேற்கொள்ள முயன்றிருந்தார்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது பிரெஞ்சுக் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சிறைத்தண்டனைக் காலம் நிறைவடைந்ததும் அவர் நாட்டை விட்டு அவரது சொந்த நாடான ஆபிரிக்காவின் Mauritania நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்