Paristamil Navigation Paristamil advert login

ஏழு மணிக்குள் இரவு உணவை உண்ண வேண்டும் எனக் கூறக் காரணம் என்ன தெரியுமா?

ஏழு மணிக்குள் இரவு உணவை  உண்ண வேண்டும் எனக் கூறக் காரணம் என்ன தெரியுமா?

4 புரட்டாசி 2023 திங்கள் 15:36 | பார்வைகள் : 2195


ஆரோக்கியமான உடல் நலத்திற்கு இரவு 7 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமில்லாத இருந்தாலும் அதை முடிந்தவரை கடைபிடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இரவு 7 மணிக்கு முன்பாக இரவு உணவை சாப்பிட்டால் ஜீரணம் ஆவதற்கு தேவையான நேரம் கிடைக்கும் என்றும் தாமதமாக சாப்பிட்டு அதிகாலை சீக்கிரம் அடைந்தால் ஜீரணம் ஆவதற்கு தாமதம் ஆகும் என்றும் புறப்படுகிறது.  
 

மேலும் இரவில் தாமதமாக சாப்பிட்டால் உணவு ஜீரணமாக அதிகமாக நேரம் எடுத்துக் கொள்வதால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும் என்றும்  ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.  

 மேலும் தூங்குவதற்கு   குறைந்தது 3 மணி நேரத்துக்கு முன்பு உணவு எடுத்துக் கொண்டால் தான் சர்க்கரை அளவு சரியாக இருக்கும் என்று நீரிழிவு நோயை தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.  முடிந்தவரை குடும்பத்துடன் இரவு உணவை சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என்றும்  கூறப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்