Paristamil Navigation Paristamil advert login

 ஹிஸ்புல்லாவின்  கடும் அச்சுறுத்தல்  - அவசர நிலையை பிரகடனம் செய்த இஸ்ரேல்

 ஹிஸ்புல்லாவின்  கடும் அச்சுறுத்தல்  - அவசர நிலையை பிரகடனம் செய்த இஸ்ரேல்

25 ஆவணி 2024 ஞாயிறு 07:31 | பார்வைகள் : 1236


ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து கடும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து லெபனானின் தென் பகுதி மீது அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை முன்னெடுத்திருந்தது.

கடந்த இரு தினங்களாக உளவு அமைப்புகள் ஹிஸ்புல்லா தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தீவிரமான தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே திடீர் தாக்குதலை ஹிஸ்புல்லா முன்னெடுத்துள்ளது. அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதலை முன்னெடுத்துள்ளதுடன், நாட்டில் 48 மணி நேர அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து ஹமாஸ் படைகள் தாக்குதலை முன்னெடுத்துள்ளதன் பின்னர், ஹிஸ்புல்லா படைகள் தினசரி இஸ்ரேல் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.

கடந்த மாதம் பெய்ரூட்டில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா ராணுவ தளபதி Fuad Shukr கொல்லப்பட்டதற்கு கண்டிப்பாக பழிவாங்கப்படும் என்றே அந்த அமைப்பு சூளுரைத்திருந்தது.

அதனால் ஏற்படும் பின்விளைகள் தொடர்பில் கவலைப்படுவதில்லை என்றும் ஹிஸ்புல்லா அதிவித்திருந்தது. தற்போது இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை முன்னெடுத்துள்ள ஹிஸ்புல்லா, முதற்கட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

அத்துடன் இன்னொரு நாளில் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஹிஸ்புல்லா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. மேலும், லெபனான் பொதுமக்களை இலக்கு வைத்தால், உடனடி பதிலடி உறுதி என்றே குறிப்பிட்டுள்ளது.

மேலும், தாங்கள் முன்னெடுக்கும் ராணுவ நடவடிக்கையானது முடிவுக்கு வர சில காலமாகலாம் என்றும், விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும் என்றும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்