சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்? வெளியான நாசாவின் அறிவிப்பு
25 ஆவணி 2024 ஞாயிறு 07:41 | பார்வைகள் : 786
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது குறித்து நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த சூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் என்ற விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றது.
அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams), புட்ச் வில்மோர் ஆகிய விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.
இருவரும் விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி செய்து வந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களின் விண்கலம் பாதிக்கப்பட்டது.
இதனால் அவர்கள் திட்டமிட்டப்படி 8 நாட்களில் பூமிக்கு திரும்ப முடியவில்லை. கிட்டத்தட்ட 80 நாட்களாக இருவரும் விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுனிதா, புட்ச் இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என கூறியுள்ளது.
அவர்கள் இருவரும் எலான் மஸ்கின் Space X நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் பூமியை வந்தடைவார்கள் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம் இருவரும் விண்வெளியில் 8 மாதங்களாக தங்கியிருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.