Paristamil Navigation Paristamil advert login

சந்திரனில் காந்த விண்வெளி லாஞ்சரை உருவாக்க சீனா திட்டம்!

சந்திரனில் காந்த விண்வெளி லாஞ்சரை உருவாக்க சீனா திட்டம்!

26 ஆவணி 2024 திங்கள் 03:59 | பார்வைகள் : 378


சீன விஞ்ஞானிகள் சந்திரனில் இருந்து பூமிக்கு ஹீலியத்தை கொண்டுவர ஒரு  காந்த விண்வெளி லாஞ்சரை உருவாக்க தயாராகி வருகின்றனர்.

80 மெட்ரிக் டன் (800 குவிண்டால்) எடை கொண்டதாக இருக்கும் இந்த லாஞ்சர் சுமார் 18 பில்லியன் (இலங்கை ரூ.5,39,460 லட்சம் கோடி) செலவாகும்.

சந்திர மேற்பரப்பில் உள்ள ஐசோடோப்பு ஹீலியம் -3 ஐ அகற்ற இது பயன்படுத்தப்படும்.

ஷாங்காய் இன்ஸ்டிடியூட் ஆஃப் சேட்டிலைட் இன்ஜினியரிங் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அணுக்கரு இணைவிலிருந்து சுத்தமான ஆற்றலைப் பெற ஹீலியம் -3 ஒரு நம்பிக்கைக்குரிய வழியாகும்.

வெறும் 20 டன் ஹீலியம் -3 ஒரு வருட ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும்.

இந்த லாஞ்சர் எப்போது தயாராகும் என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இது சந்திர மேற்பரப்பில் குறைந்தது 20 ஆண்டுகள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ரஷ்யா மற்றும் சீனாவின் கூட்டு விண்வெளி திட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதில், 2035-ஆம் ஆண்டுக்குள் நிலவின் தென் துருவத்தில் ஒரு ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கவும் இரு நாடுகளும் முன்மொழிந்தன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்