அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
26 ஆவணி 2024 திங்கள் 15:40 | பார்வைகள் : 1679
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 37 சதம், விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 64 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388 ரூபாய் 85 சதம், விற்பனைப் பெறுமதி 403 ரூபா 97 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபாய் 71 சதம், விற்பனைப் பெறுமதி 342 ரூபாய் 57 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபாய் 3 சதம், விற்பனைப் பெறுமதி 362 ரூபாய் 44 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபா 22 சதம், விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 4 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 52 சதம், விற்பனைப் பெறுமதி 208 ரூபாய் 72 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபாய் 20 சதம், விற்பனைப் பெறுமதி 235 ரூபாய் 94 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 4 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 12 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.