Paristamil Navigation Paristamil advert login

ஹிஸ்புல்லா தளங்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

ஹிஸ்புல்லா தளங்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

26 ஆவணி 2024 திங்கள் 16:59 | பார்வைகள் : 7054


லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களை எவ்வாறு துல்லியமாக இஸ்ரேலிய ராணுவ படை தாக்கியது என்பது தொடர்பான வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் விமானப்படை ஞாயிற்றுக்கிழமை லெபனானின் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களை குறிவைத்து துல்லிய தாக்குதலை அரங்கேற்றியது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணியளவில் தொடங்கிய இந்த தாக்குதல் இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதியில் ஹிஸ்புல்லாவின் அதிகரிக்கும் அச்சுறுத்தல்களை நடுநிலைப் படுத்துவதற்காக நடத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் தொடர்பான வீடியோவை இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில், இஸ்ரேலிய குடும்பங்கள் மற்றும் வீடுகளை குறிவைத்த ஹிஸ்புல்லாவின் பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்களை குறிவைத்து இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை லெபனானில் இருந்தது என குறிப்பிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 100 போர் விமானங்கள் இந்த ராணுவ நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்