ஜொந்தாம் வீரர் பலி.. ஒருவர் தேடப்படுகிறார்..!!
27 ஆவணி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 10190
இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜொந்தாம் வீரர் ஒருவரை மோதித்தள்ளி விட்டு தப்பியோடிய ஒருவர் தேடப்படுகிறார். ஜொந்தாம் வீரர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை தென் கிழக்கு எல்லை மாவட்டமான Mougins (Alpes-Maritimes) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்கு வீதிகண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த 53 வயதுடைய ஜொந்தாம் வீரர் ஒருவர், இரவு 8.30 மணி அளவில் வீதியில் வேகமாக பயணித்த சாரதி ஒருவரை நிறுத்தியுள்ளார். ஆனால் அவர் மகிழுந்தை நிறுத்தாமல் ஜொந்தாம் வீரரை மோதித்தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தூக்கி வீசப்பட்ட ஜொந்தாம் வீரர், படுகாயமடைந்துள்ளார். அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அது பலனளிக்காமல் இரவு 9.30 மணி அளவில் பலியாகியுள்ளார்.
பலியான ஜொந்தாம் வீரர் 12 மற்றும் 16 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BMW sedan ரக மகிழுந்து ஒன்றினைச் செலுத்திய சாரதி தேடப்பட்டு வருகிறார். A8 நெடுஞ்சாலை வழியாக மகிழுந்து ஓடி மறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan