இதுவரை 131 பில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ள சவூதி அரேபியா
27 ஆவணி 2024 செவ்வாய் 07:10 | பார்வைகள் : 899
மன்னர் அப்துல் ரஹ்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களது காலம் தொட்டே மனிதாபிமான உதவிகளை உலகம் பூராகவும் செய்து வருவதில் சவூதி அரேபிய இராச்சியம் முன்னனி வகித்து வருகிறது. இந்த நாமத்தை இன்றும் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களும் கட்டிக் காத்து வருகின்றனர். உலக மக்களின் இன்னல்களைப் போக்குவதற்கும் கடினமான நேரங்களில் கைகொடுக்கும் நோக்கோடுமே இந்த தொண்டு மற்றும் மனிதாபிமான உதவிகளை சவூதி அரசாங்கம் செய்து வருகிறது.
1975 ஆம் ஆண்டிலிருந்து 2024 வரையான காலப்பகுதிக்குள், சவூதி அரேபியா 171 நாடுகளுக்கு தோராயமாக 131 பில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாகவும் உதவிகளாகவும் வழங்கியுள்ளதோடு, 7090 மனிதாபிமான, நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டின் முடிவில், இவ்வாண்டில் உலகளவில் மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகளை வழங்கும் நாடுகளுல் நான்காவது பெரிய நன்கொடை வழங்கும் நாடு என சவூதி அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டில் மாத்திரம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதிவிகளுக்காக சவூதி செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகளின் நிதி கண்காணிப்பு சேவையின் (FTS) படி, வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் பேரழிவுகள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு பிற நாடுகள் வழங்கும் அனைத்து உதவிகளிலும் இந்த தொகை 3.6% ஆகும்.
இந்த மனிதாபிமான முயற்சியை மேலும் மேம்படுத்தும் வகையில், 2015 ஆம் ஆண்டு மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) நிறுவப்பட்டது. அது நிறுவப்பட்டது தொடக்கம், 100 நாடுகளில் 3009 உதவித் திட்டங்களை மேற்கொண்டுள்ளதோடு 6.94 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியுள்ள உதவிகளை வழங்குகியுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள் சவூதியின் உதவிகளால் பயனடைந்துள்ளமை மறுக்கமுடியாத உண்மையாகும்.
உலகின் முதன்மையான மனிதாபிமான உதவிகளை வழங்கக் கூடிய நாடு என்ற சவூதியின் நிலையை உயர்த்த, சவூதி உதவி தளம், சவூதி சர்வதேச தன்னார்வ இணையதளம் மற்றும் சஹேம் மின்னணு நன்கொடை தளம் போன்ற தளங்களும் அந்நாட்டு அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளன.
KSrelief ஆனது மனிதாபிமான உதவிகளை உலக நாடுகளுக்கு வழங்குவதில் குறிப்பாக யெமன், காசா, சிரியா மற்றும் துருக்கி போன்று நாடுகளுக்கான உதவிகளில் முன்னணியில் உள்ளது. இலங்கைக்கும் பல மனிதாபிமான உதவித் திட்டங்களை வழங்கி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதில் மிக முக்கியமாக அன்மை நாட்களில் இலவச கண் அறுவை சிகிச்சைத் திட்டத்தை இலங்கை மக்களுக்காக நடாத்தியமை யாவரும் அறிந்ததே.
யெமன் நாட்டைப் பொருத்தமட்டில் KSrelief, கண்ணிவெடி அகற்றலுக்கான சவூதி திட்டம் (MASAM), செயற்கை மூட்டு மையங்கள் மற்றும் ஆயுத மோதலுடன் தொடர்புடைய குழந்தைகளுக்கான மறு ஒருங்கிணைப்புத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. யெமன் அகதிகளை சவூதிக்கு வரவேற்று, அவர்களுக்கு சுகாதாரம், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குகியிருக்கிறது.
காசாவில் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ள, KSrelief வான் மற்றும் கடல் மார்கங்களினூடாக 185 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவப் பொருட்களை விநியோகித்துள்ளது. ஜோர்தானில் உள்ள 150 காசான் மக்களுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புற்றுநோய் சிகிச்சைக்கு இந்த மையம் நிதியளித்தது.
சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கங்களுக்கு உதவி செய்யும் வகையில், KSrelief செவிப்புலன் மறுசீரமைப்பை மற்றும் செவிப்புலனுக்கான இயந்திரம் வழங்குதல் தன்னார்வத் திட்டத்தை நடைமுறைப் படுத்தியது. இது உலகின் மிகப்பெரிய தன்னார்வ மனிதாபிமான முயற்சியாக கருதப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையானது நவம்பர் 24ம் திகதியை, சவூதி அரேபியவின் பரிந்துரையின் பெயரில் உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினமாக ஏற்றுக்கொண்டது. இது மனிதாபிமான உதவிகளை உலகுக்கு வழங்குவதல் சவூதி அரேபியாவின் ஆர்வத்துக்கான தக்க சான்றாக அமைகிறது. சவூதி அரேபியா ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிறிக்கும் இத் திட்டத்தின் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், KSrelief நவம்பர் மாதம் ரியாத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கான சர்வதேச மாநாட்டையும் நடாத்தவுள்ளது.
இந்த முயற்சிகள் உலக மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்தில் சவுதி அரேபியாவின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகின்றன, இது இராச்சியத்தின் விஷன் 2030 இலக்குகளில் ஒன்றாகும்.
நன்றி வீரகேசரி