Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் கிரிக்கெட் அணி  தோல்வி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் 

பாகிஸ்தானில் கிரிக்கெட் அணி  தோல்வி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் 

27 ஆவணி 2024 செவ்வாய் 07:20 | பார்வைகள் : 848


வங்காளதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் அணி வரலாற்று தோல்வியடைந்ததை குறிப்பிட்டு, இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளார். 

ராவல்பிண்டியில் நடந்த டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.

ஷான் மசூட் தலைமையிலான பாகிஸ்தான் அணி படுமோசமாக தோல்வியடைந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

இது விழிப்புணர்வு இல்லாததை காட்டுவதாக அணித்தலைவர் ஷான் மசூட்டை முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி சாடினார்.  

இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனும் பாகிஸ்தானின் தோல்வி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், "பாகிஸ்தானில் கிரிக்கெட்டுக்கு என்ன நடந்தது? நான் PSL விளையாடியபோது அந்த லீக்கின் தரம் அபாரமாக இருந்தது. வீரர்கள் மிகவும் சிறந்த பணி நெறிமுறையைக் கொண்டிருந்தனர் மற்றும் இளைஞர்கள் மாயஜாலத்தை காட்டினர். ஆனால் இப்போது அங்கு என்ன நடக்கிறது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணியின் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து ஷான் மசூட் இன்னும் வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்