Paristamil Navigation Paristamil advert login

2 கோரிக்கைகளை முன்வைக்கும் சூர்யகுமார் யாதவ் - சிக்கலில் மும்பை இந்தியன்ஸ் அணி

2 கோரிக்கைகளை முன்வைக்கும் சூர்யகுமார் யாதவ் - சிக்கலில் மும்பை இந்தியன்ஸ் அணி

27 ஆவணி 2024 செவ்வாய் 07:26 | பார்வைகள் : 469


சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையை பயன்படுத்தி வாங்கியதோடு, ரோகித் சர்மாவிடம் இருந்த கேப்டன் பதவியையும் ஹர்திக் பாண்டியாவிடம் வழங்கியது.

இதனால் அணியில் இருந்த ரோகித் சர்மா உட்பட மூத்த வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரிடையே பெரும் சலசலப்பை தூண்டியது.

மேலும் எந்தவொரு முன்னறிவிப்பு இன்றி தன்னிடமிருந்து கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டத்தை அடுத்து, எதிர்வரும் சீசனில் மும்பை அணியில் ரோகித் சர்மா விலக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய அணியின் கேப்டனாக உள்ள சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால் தான் வைக்கும் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

 அதில், தான் தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருப்பதால், ஐபிஎல்-லும் கேப்டனான இருப்பது விளையாடினால் தான் சரியாக இருக்கும் என்றும், மேலும் ஐபிஎல்-லில் அதிக தொகைக்கு தக்க வைக்கும் வீரராகவும் தான் இருந்தால் தான் சரியாக இருக்கும் என்று தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியாவையே முதல் வீரராக அதிக தொகைக்கு தக்க வைக்க நினைப்பதாகவும், சூர்யகுமார் யாதவ்-வை இரண்டாவது வீரராக 14 கோடி கொடுத்து தக்க வைக்க விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நபராக தக்கவைக்கும் வீரராக தான் இருக்க வேண்டும் என்று சூர்யகுமார் யாதவ் திட்டவட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்