’கூலி’ திரைப்படத்தில் அமீர்கான் நடிக்கின்றாரா?

27 ஆவணி 2024 செவ்வாய் 12:01 | பார்வைகள் : 4249
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’கூலி’. இந்த படத்தில் ஏற்கனவே கன்னட நடிகர் உபேந்திரா, சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் அமீர்கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகள் ஆகவே இந்திய அளவில் ஒரு திரைப்படம் மிகப்பெரிய வசூலை பெற வேண்டும் என்பதற்காக மல்டி ஸ்டார் படங்களாக உருவாக்கி வருகிறது. ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார். சுனில் உள்ளிட்டோர் நடித்த நிலையில் தற்போது உருவாகி வரும் ’வேட்டையன்’ திரைப்படத்திலும் அமிதாப்பச்சன், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அந்த வகையில் ’கூலி’ திரைப்படத்திலும் அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது