இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு பால் ஊற்றும் போது உயிர் பிரிவது ஏன்?
27 ஆவணி 2024 செவ்வாய் 12:06 | பார்வைகள் : 1731
இறப்பு என்பது தவிர்க்கவே முடியாதது. நோய்வாய்ப்பட்டு இறப்பதே பொதுவான காரணங்களில் ஒன்றாக உள்ளது. வயது மூப்பு ஏற்படும் உடல் உறுப்புகள் செயல்பாட்டில் தொய்வு ஏற்படும். வயதான காலத்தில் சில ஆரோக்கியமான முறையில் இருந்தாலும், சிலர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பார்கள். அவர்களின் உடல் நிலை மோசமடைந்து எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்ற நிலை ஏற்படும். வெறும் மூச்சு மட்டுமே அவரின் உடலில் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது அவரின் வாயில் பால் அல்லது தண்ணீர் ஊற்றினால் அவரின் உயிர் உடனடியாக பிரிந்துவிடும். இதற்கு என்ன காரணம் தெரியுமா இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
நாம் சுவாசிக்கும் சுவாசம் மூக்கின் வழியாகவும், வாயின் வழியாகவும் ஒரு இடத்தில் வந்து சேரும். அதன் அருகில் சுவாசப்பாதை, உணவுப் பாதைக்கும் நுட்பமான மாறும் திறப்பு உண்டு. அதில் சாப்பிடும் உணவு குழாய்க்கும், வாய் திறந்து மூச்சை இழக்கும் போது சுவாச பாதைக்கு மாற்றி அனுப்பும் ஒரு நுட்பமான அமைப்பு இருக்கும்
வயதாக வயதாக ஒரு மனிதனின் ஒவ்வொரு தசையும் இயக்கும் அதன் செயல்பாடுகளை குறைத்துக் கொண்டே இருக்கும். படுக்கையில் படுத்திருக்கும் ஒரு மனிதருக்கு இதயம் மெதுவாக துடித்துக் கொண்டிருக்கும் போது வாயின் வழியே பாலை ஊற்றினால் உணவுக் குழாய்க்கு பதில் மூச்சுக் குழாயில் சென்று சுவாசத்தை தடை செய்து விடும். இதனால் தான் உயி உடனடியாக பிரிகிறது. இதனால் உடல்நலமில்லாமல் இருக்கும் வயதானவர்களுக்கு கடைசியாக பால் ஊற்றுகின்றனர்.
குறிப்பாக இறக்கும் தருவாயில், மூச்சு விடுவதும், மூச்சை இழுப்பதும் வாய் வழியாகவே நடைபெறுகிறது. அந்த நேரத்தில் வாயில் பாலோ ஊற்றினால், அது உணவுக்குழாய்க்கு பதில் மூச்சுக்குழாயில் சென்று மூச்சு அடைபட்டு உயிர் பிரியும். இதுவும் ஒருவகை கருணைக்கொலை என்றே சொல்லப்படுகிறது. உணவு சாப்பிடும் போது சில சமயம் உணவுக் குழாய்க்கு பதில் மூச்சுக்குழாய்க்கு செல்வதால் புரையேறும். சில நேரங்களில் வாயின் வழியாக குடிக்கும் நீர் மூக்கின் வழியாக வெளியேறுவதும் இதனால் தான்.