Paristamil Navigation Paristamil advert login

ஹோட்டல் சுவையில் கார சட்னி

ஹோட்டல் சுவையில் கார சட்னி

27 ஆவணி 2024 செவ்வாய் 12:17 | பார்வைகள் : 914


என்னதான் வீட்டில் விதவிதமாக இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி செய்து கொடுத்தாலும் சில ஹோட்டல்களில் தரப்படும் கார சட்னியின் சுவையை அடித்துக்கொள்ள முடியாது என்றே சொல்லலாம்.

எனவே அனைத்து வயதினரும் சுவைத்து சாப்பிடும் வகையில் ஹோட்டல் சுவையில் ருசியான கார சட்னியை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 3

பழுத்த தக்காளி - 4

காய்ந்த காஷ்மீரி மிளகாய் - 8

புளி - நெல்லிக்காய் அளவு

பூண்டு - தோலுடன் 5 பெரிய பல்

உப்பு - சுவைக்கேற்ப

தாளிக்க தேவையானவை :

கடுகு - 3/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை அலசி சற்று பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக் எடுத்து கொள்ளவும்.

பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, காய்ந்த காஷ்மீரி மிளகாய், தோலுடன் பூண்டு பல் மற்றும் புளி சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன் அடுப்பை அணைத்து அவற்றை ஆறவிடவும்.

பின்னர் அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தற்போது அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பின்னர் அந்த தாளிப்பை அரைத்து வைத்துள்ள காரா சட்னியில் போட்டு கலந்துகொள்ளுங்கள்.அவ்வளவுதான் ஹோட்டல் சுவையில் கார சட்னி இட்லி மற்றும் தோசையுடன் தொட்டு சாப்பிட ரெடி…

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்