டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு:கவிதாவுக்கு ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட்
27 ஆவணி 2024 செவ்வாய் 13:56 | பார்வைகள் : 1033
டில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பி.ஆர்.எஸ்., கட்சி தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு, சுப்ரீம் கோர்ட் இன்று(ஆகஸ்ட் 27) ஜாமின் வழங்கியது.
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் தொடர்புடையதாக கூறி, தெலுங்கானாவின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 15ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கைது செய்தது.