collèges : புதிய கல்வி ஆண்டில் இருந்து தொலைபேசிகளுக்கு தடை..!
27 ஆவணி 2024 செவ்வாய் 16:12 | பார்வைகள் : 5498
செப்டம்பரில் புதிய கல்வி ஆண்டு ஆரம்பமாவதை அடுத்து, கல்லூரிகளில்
தொலைபேசிகள் பயன்படுத்துவதற்கு கொண்டுவரப்பட்ட தடை பரீட்சிக்கப்பட உள்ளது.
கிட்டதட்ட 200 கல்லூரிகளில் (collèges) இந்த தடை பரீட்சாத்தமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. பின்னர் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் முற்று முழுதாக இந்த தடை நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
பிரான்சில் நடுத்தர பாடசாலைகளில் ஏற்கனவே தொலைபேசிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முயற்சியினையும் அரசு மேற்கொள்ள உள்ளதாக கல்வி அமைச்சர் Nicole Belloubet இன்று தெரிவித்தார்.
தொலைபேசியின் திரை பார்வையினைக் குறைக்கவும், இணையமூடாக விரோத கருத்துக்கள் பகிரப்படுவதை தவிர்க்கவும் இந்த தடை கொண்டுவரப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.