மீண்டும் சென் நதியில் நீந்திய ஆன் இதால்கோ..!

27 ஆவணி 2024 செவ்வாய் 17:37 | பார்வைகள் : 13992
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ சென் நதியில் இன்று ஓகஸ்ட் 27, செவ்வாய்க்கிழமை நீந்தினார்.
பரா-ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், இன்று மாலை பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள Bras Marie பகுதி நதியில் குதித்து நீந்தினார். ட்ரையத்தலோன் உள்ளிட்ட நீச்சல் போட்டிகளுக்காக சென் நதி தயாராக இருப்பதாக தெரிவிக்கவே அவர் அதில் நீந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆன் இதால்கோ சென் நதியில் நீந்துவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஜூலை 17 ஆம் திகதி அவர் சென் நதியில் நீந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1