தொடர்ந்தும் நாடாளுமன்றம் அமைப்பதில் அரசு தலைவரின் இழுத்தடிப்பு ஏன்?
27 ஆவணி 2024 செவ்வாய் 17:49 | பார்வைகள் : 2737
தேர்தல் நடந்து முடிந்து ஏறத்தாழ இரண்டு மாதங்களை எட்டியுள்ள நிலையில் தொடர்ந்து அரசு தலைவர் நாடாளுமன்றத்தை அமைப்பதில் இழுத்தடிப்பு செய்து வருவதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் மக்களின் ஜனநாயக தெரிவினை அரசு தலைவர் தொடர்ந்தும் புறந்தள்ளி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதே வேளையில் அரசு தலைவரிடம் இருந்து வெளியான கருத்தில் "பெரும்பான்மை இல்லாத ஒரு அரசாங்கம் அமைந்தால் மறுநாளே அந்த அரசாங்கம் ஏனைய கட்சிகளினால் கவிழ்க்கப்படும், அப்படி ஒரு அரசை அமைப்பதை விட உறுதியான ஒரு அரசை அமைப்பதே சிறந்தது" என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பேச்சு வார்த்தைகள் கட்சிகளோடும் அரச பிரதிநிதிகள் நடைபெற்று வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. அவைபற்றி முழுமையாக பார்க்கிறது இந்த பதிவு.