Paristamil Navigation Paristamil advert login

Seine-et-Marne : காவல்துறை வீரர் படுகாயம்..!

Seine-et-Marne : காவல்துறை வீரர் படுகாயம்..!

28 ஆவணி 2024 புதன் 14:27 | பார்வைகள் : 7134


நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்த காவல்துறை வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்

Dammarie-les-Lys (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு இடம்பெற்றுள்ளது. வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறை வீரர் ஒருவர், சிவப்பு சமிக்ஞையை மீறி பயணிக்கும் மகிழுந்து ஒன்றை கவனித்துள்ளார். அதை அடுத்து குறித்த மகிழுந்து சாரதியை மோட்டார் சைக்கிள் மூலம் துரத்திச் சென்றுள்ளார். 

இந்நிலையில், வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்துடன் மோதி குறித்த வீரர் காயமடைந்துள்ளார். 

உலங்குவானூர்தி மூலம் அவர் Henri-Mondor மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவல்துறையினரின் மோட்டார் சைக்கிளுடன் மோதிய சாரதிக்கு மது சோதனை மேற்கொள்ளப்பட்டு. அதில் அவர் மது அருந்தியிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்