இன்று : கோலாகலமான பரா ஒலிம்பிக் ஆரம்பநாள் நிகழ்வு! - இலவச நுழைவுச்சீட்டு பெறுவது எப்படி..?

28 ஆவணி 2024 புதன் 15:06 | பார்வைகள் : 6950
பரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாள் நிகழ்வு இன்னும் சில மணிநேரங்களில் ஆரம்பமாக உள்ளது. நாளை ஓகஸ்ட் 29 ஆம் திகதி போட்டிகள் ஆரம்பமாகும்.
இன்று இரவு 8 மணி முதல் 11.15 மணி வரை Champs-Élysées முதல் Place de la Concorde வரையான பகுதியில் மேடைகள் அமைக்கப்பட்டு அதில் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. பிரபல திரைப்பட நடிகர் ஜாக்கி சார் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி மேடையில் ஏறுவார் என தெரிவிக்கப்படுகிறது.
திரைப்பட நடிகள், மேடை நாடக கலைஞர்கள், பாடகர்கள் என புகழ்பெற்ற பல நட்சத்திரங்கள் இந்த ஆரம்பநாள் நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.
50,000 பார்வையாளர்கள் இந்த ஆரம்பநாள் நிகழ்வை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். அவர்களில் 35,000 பேருக்கான நுழைவுச் சிட்டைகள் மாத்திரம் இணையத்தளமூடாக விற்பனை செய்யப்பட்டிருந்தன. மீதமிருக்கும் 15,000 நுழைவுச் சிட்டைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இந்த நுழைவுச் சிட்டைகள் ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ எனும் கணக்கில் வழங்கப்பட உள்ளது. நேரகாலத்தோடு நிகழ்வு இடம்பெறும் இடத்துக்குச் சென்றால், 15,000 பேர்களில் ஒருவராகும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.