Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

29 ஆவணி 2024 வியாழன் 05:07 | பார்வைகள் : 656


முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன் தினம் இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இதன்படி தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறைப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்-அமைச்சரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்த சூழலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் வழியாக நேற்று பிற்பகல் அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு முதல்-அமைச்சருக்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்றடைந்துள்ளார். அங்கு முதல்-அமைச்சருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

இதனைத்தொடர்ந்து 31ம் தேதி புலம்பெயர்ந்த தமிழர்களை முதல்-அமைச்சர் சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 2ம் தேதி சான்பிரான்ஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். அங்கு 10 நாட்கள் முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்க முதல்-அமைச்சர் அழைப்பு விடுகிறார். அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 14ம் தேதி சென்னை திரும்ப முதல்-அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்