Paristamil Navigation Paristamil advert login

தெருவில் தூங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு. UF மற்றும் FAS.

தெருவில் தூங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு. UF மற்றும் FAS.

29 ஆவணி 2024 வியாழன் 07:15 | பார்வைகள் : 2377


பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் உள்ள Île-de-France, Lyon, Marseille, Lille, Rennes மற்றும் Strasbourg நகரங்களில் வீடற்றோரின் நிலை அதிகரித்து வருவதால் தெருக்களில் இரவைக்களிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த அண்டுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு தெருக்களில் தூங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 120% வீதத்தால் அதிகரித்து உள்ளது.

நேற்றைய தினம் 
Unicef France மற்றும் Fédération des acteurs de la solidarité ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து வெளியிட்ட கருத்து கணிப்பில் 2020 இல் 927 குழந்தைகள் என இருந்த நிலை மூன்று ஆண்டுகளில் அதிகரித்து 2023 இல் மொத்தம் 1,990 ஆக இருந்தது என்றும், இது 2024 இல் மேலும் அதிகரித்தது 2,049 குழந்தைகள் என நிலமை மோசமடைந்து செல்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த எல்லைகள் அற்ற மருத்துவ சேவைகள் அமைப்பு "வீடுகள் அற்று தெருவில் தூங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, கல்வி கற்க்கும் வாய்ப்பையும் குழந்தைகளுக்கு பறித்து விடுகிறது இதனால் ஒரு எதிர்கால சந்ததியினர் ஆபத்தானவர்களாக வளர்ந்து வருகிறார்கள், இது ஒரு தேசத்துக்கு பெரும் ஆபத்தானது" என தெரிவித்துள்ளது.

'அரசாங்கம் இது குறித்து சரியான தீர்வை தேடவேண்டும், குழந்தைகள் நல அமைப்புக்கள் அதற்க்கான அழுத்தத்தை அரசுக்கு கொடுக்கவேண்டும் என Unicef France இன் தலைவர் Adeline Hazan தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்