மனித மூளையில் பிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிப்பு
29 ஆவணி 2024 வியாழன் 14:11 | பார்வைகள் : 7870
மனிதர்களின் மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் நுழைந்து கடுமையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், மூளை மாதிரிகளில் 0.5% பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பு, பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீவிரத்தை எடுத்துக்காட்டுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Cukurova பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Sedat Gundogdu உட்பட பல நிபுணர்கள், பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்கொள்ள உலகளாவிய அவசரநிலை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan