Paristamil Navigation Paristamil advert login

கட்டுப்பாட்டை மீறி வேகமாக பயணித்த பாடகி.. கைது!

கட்டுப்பாட்டை மீறி வேகமாக பயணித்த பாடகி.. கைது!

29 ஆவணி 2024 வியாழன் 14:16 | பார்வைகள் : 2912


சொல்லிசை பாடகியான (rappeur) Zola அதிவேகமாக பயணித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை இரவு இச்சம்பவம் Essonne நகரில் இடம்பெற்றுள்ளது. பரிஸ் நோக்கிச் செல்லும் A6 நெடுஞ்சாலையில் அவரது Mini Cooper மகிழுந்தில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளார்.

வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து முற்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை மீறி பயணித்துள்ளார். அதை அடுத்து மகிழுந்தை துரத்திச் சென்று அவரைக் கைது செய்தனர்.

அவர் போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு மகிழுந்தைச் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2023 ஆம் ஆண்டு பாடகர் Zola வின் தாயாரை மகிழுந்து சாரதி ஒருவர் மோதியிருந்தார். அதன்போது அவர் சமூகவலைத்தளங்களில் பல பதிவுகளை வெளியிட்டு தனது கோபத்தினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்