Paristamil Navigation Paristamil advert login

'இந்தியன் 2'.. தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்..!

'இந்தியன் 2'.. தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்..!

29 ஆவணி 2024 வியாழன் 14:35 | பார்வைகள் : 3739


உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2 ’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு பின்னரும் பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு திரைப்படம் ஹிந்தியில் வெளியாகும் போது அந்த படம் தியேட்டரில் வெளியாகிய 8 வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியாக வேண்டும் என்பது மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்களின் விதிமுறையாக உள்ளது.

ஆனால் அந்த விதிமுறையை மீறி ’இந்தியன் 2’ படத்தின் ஹிந்தி பதிப்பான ’ஹிந்துஸ்தானி 2’ திரைப்படம் ஒரே மாதத்தில் வெளியாகி உள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, ‘இந்தியன் 2’ தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

8 வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியிடுவோம் என்ற ஒப்பந்தத்தை மீறியதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் இந்த நோட்டீஸ்க்கு தயாரிப்பு நிறுவனம் என்ன பதில் அளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்