தேர்தல் நடவடிக்கைக்காக இலங்கை வந்த ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் வருகை
29 ஆவணி 2024 வியாழன் 16:04 | பார்வைகள் : 10632
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் முதலாவது குழு நாட்டிற்கு வருகை தந்துள்ளது.
எதிர்வரும் சில வாரங்களுக்குள் மற்றுமொரு குழுவினர் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழுவும் நாட்டிற்கு வருகை தந்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து குறித்த குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகளும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan