இல் து பிரான்சுக்குள் 2,100 மாணவர்களுக்கான வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.. மாகாண முதல்வர் அறிவிப்பு!

30 ஆவணி 2024 வெள்ளி 11:00 | பார்வைகள் : 6049
இல் து பிரான்சுக்குள் 2,100 மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என மாகாண முதல்வர் Valérie Pécresse அறிவித்துள்ளார்.
இவ்வருட ஒக்டோபரில் புதிய கல்வி ஆண்டில் உயர்கல்வி மாணவர்களுக்காக இந்த வகுப்பறைகள் திறக்கப்படும் எனவும், 2028 ஆம் ஆண்டில் மொத்தமாக 30,000 மாணவர்களுக்கு தேவையான இடங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தற்போது இல் து பிரான்சுக்குள் 535,244 மாணவர்கள் பயில்கின்றனர். 2023 ஆம் ஆண்டில் குறித்த மாணவர்களுக்காக அரசு 1.8 பில்லியன் யூரோக்கள் செலவிட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.