Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமெரிக்காவில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

30 ஆவணி 2024 வெள்ளி 06:31 | பார்வைகள் : 761


தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"சான் பிரான்சிஸ்கோவில் ஒரே நாளில் நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலீடுகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவில் ஒரே நாளில் ரூ.900 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இது சென்னை, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் 4,100 வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுக்கும். 

இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் முதலீட்டை ஈர்க்கும் வேகம் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். அமெரிக்காவில் இருந்து மேலும் அதிக முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்படும். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி எங்கள் பயணத்தை முன்னெடுத்து செல்கிறோம்."

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்