பிரான்சில் COVID-19 தடுப்பூசி போட்டோருக்கு அதிகரிக்கும் மாரடைப்பு. மருத்துவ சஞ்சிகை JAMA
30 ஆவணி 2024 வெள்ளி 07:07 | பார்வைகள் : 4443
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரதான மருத்துவ சஞ்சிகையான JAMA நேற்றைய தினம், "பிரான்சில் COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி போட்டோருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து செல்கிறது" என்னும் தகவல் குறித்து தாங்கள் நடத்திய ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதன்படி பிரான்சில் COVID-19 தொற்றுநோய் மிகவும் மோசமாக பதித்தவர்களில் 90% சதவீதமாக நோயாளர்களை (1,60 000) தடுப்பூசிகள் தான் காப்பாற்றி இருக்கிறது, தடுப்பூசிகள் இல்லையென்றால் உலகம் இவ்வளவு வேகமாக வெளியே வந்திருக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட 54 மில்லியன் மக்கள் தொகையில் இதுவரை 560 பேருக்கு மட்டுமே நேரடியாக அதாவது தடுப்பூசியின் பக்கவிளைவாக இதய வீக்கம், அல்லது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. என தெரிவிக்கும் சஞ்சிகையின் ஆய்வறிக்கை, தடுப்பூசிக்கும், மாரடைப்புக்கு அதிக அளவிலான தொடர்புகள் உள்ளது எனும் தகவல்கள் தவறான கருத்து என தெரிவித்துள்ளது.
COVID-19 தொற்றுநோய் மனிதர்களின் சுவாசப் பையிலேயே அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவதால் இதயம் அதிகம் களைப்படைவதாலும், தொற்றுநோயின் போது வழங்கப்படும் செயற்கை சுவாச சிகிச்சை முறையால் இதயம் அதிகம் பாதிக்கப்படுவதனாலும் பலவேளைகளில் இதய வீக்கம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதே தவிர நேரடியாக தடுப்பூசிளால் அல்ல எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.