இன்னும் 100 நாட்கள்.. திறப்புவிழாவுக்கு தயாராகிறது நோர்து-டேம் தேவாலயம்..!
30 ஆவணி 2024 வெள்ளி 16:21 | பார்வைகள் : 4293
850 ஆண்டுகள் பழமையான நோர்து-டேம் தேவாலயம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தீ விபத்துக்குள்ளாகியிருந்தது. திருத்தப்பணிகள் மிக வேகமாக இடம்பெற்று வருகிறது.
இன்னும் 100 நாட்கள் கழித்து டிசம்பர் 8 ஆம் திகதி தேவாலயம் முற்றுமுழுதாக திறக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். திட்டமிட்டபடியே குறித்த திகதியில் தேவாலயம் திறக்கப்படும்!' என நோர்து-டேம் தேவாலயத்தின் பொறுப்பதிகாரி Philippe Jost தெரிவித்தார்.
கூரை வேலைப்பாடுகள் முற்று முழுதாக நிறைவடைந்துள்ளதாகவும், தரை வேலைகள் முடிவுக்கட்டத்தில் இருப்பதாகவும் அறிய முடிகிறது.
தேவாலய திறப்பு நிகழ்வுக்கு பாப்பரசருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவரது வருகை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.