Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் திடீர் நிலச்சரிவு! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி

பாகிஸ்தானில் திடீர் நிலச்சரிவு! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி

31 ஆவணி 2024 சனி 02:34 | பார்வைகள் : 6358


கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதனால், அப்பர் டிர் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

வீட்டின் மேல் சரிந்து விழுந்ததில் உள்ளே இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 3 ஆண்கள், 3 பெண்கள், 6 குழந்தைகள் என பின்னர் தெரிய வந்தது. 

இதனையடுத்து விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து அப்பகுதியை அகற்றுவதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்