Paristamil Navigation Paristamil advert login

'கோட்' படத்தில் அஜித்..?

'கோட்' படத்தில் அஜித்..?

31 ஆவணி 2024 சனி 07:55 | பார்வைகள் : 4338


தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் அஜித்தும் இருக்கிறார் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதை அடுத்து இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ’கோட்’ செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படம் ஏற்கனவே மல்டி ஸ்டார் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் ’அஜித் படம் எடுத்துவிட்டு விஜயை சந்திப்பதும், விஜய் படத்தை முடித்துவிட்டு அஜித்தை சந்திப்பதும் என எளிதாக நான் செய்துவிட்டேன் என்று நிறைய பேர் என்னை பாராட்டுவார்கள். அவரது ரசிகர்களும் என்னை திட்டவில்லை.

இந்த நிலையில் ’கோட்’ படத்தில் அஜித்தின் ஒரு தருணம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன். அது குரலா அல்லது காட்சியா என்பதை நான் இப்போது சொல்ல முடியாது. ஆனால் ’கோட்’ படத்தில் அஜித் சம்பந்தப்பட்ட தருணம் இருக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ’கோட்’ திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அஜித் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்