Paristamil Navigation Paristamil advert login

கடும் விமர்சனத்திற்கு பின் அதிரடி அரைசதம் விளாசிய பாகிஸ்தான் கேப்டன்

கடும் விமர்சனத்திற்கு பின் அதிரடி அரைசதம் விளாசிய பாகிஸ்தான் கேப்டன்

31 ஆவணி 2024 சனி 13:07 | பார்வைகள் : 1085


வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணித்தலைவர் ஷான் மசூட் 10வது அரைசதம் பதிவு செய்தார். 

பாகிஸ்தான் அணி ராவல்பிண்டியில் நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் படுதோல்வியடைந்தது.

அதன் காரணமாக பாகிஸ்தான் அணியும், அணித்தலைவர் ஷான் மசூட்டும் (Shan Masood) கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டவது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று தொடங்கவிருந்தது. ஆனால், மழை காரணமாக நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டு இன்று தொடங்கியது. 

வங்காளதேசம் பந்துவீச்சை தெரிவு செய்ததால் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கி ஆடி வருகிறது. அப்துல்லா ஷஃப்பிக் முதல் ஓவரிலேயே டக்அவுட் ஆகி வெளியேறினார்.  

அடுத்து வந்த அணித்தலைவர் ஷான் மசூட் அதிரடியாக ஆடினார். அவருக்கு பக்கபலமாக சைம் அயூப் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மசூட் பவுண்டரிகள் அதிகம் அடிக்கவில்லை என்றாலும், பந்து பந்து ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அவர் 54 பந்துகளில் 10வது அரைசதம் அடித்தார்.


தொடர்ந்து ஆடிய ஷான் மசூட் 69 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சைம் அயூப் (Saim Ayub) தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார். பாகிஸ்தான் அணி தற்போது வரை 30 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்கள் எடுத்துள்ளது.    

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்