Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க ஓபனில் ஜாம்பவான் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேற்றம்

அமெரிக்க ஓபனில் ஜாம்பவான் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேற்றம்

31 ஆவணி 2024 சனி 13:11 | பார்வைகள் : 3661



அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் தோல்வியடைந்து வெளியேறினார்.

நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியா சாம்பியன் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic) அவுஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் உடன் மோதினார். 

பரபரப்பான இப்போட்டியில் அலெக்ஸி 6-4, 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். 

இந்த தோல்வியால் நம்பர் 1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேறினார்.

பின்னர் தோல்வி குறித்து பேசிய ஜோகோவிச், "நேர்மையாக கூற வேண்டுமென்றால், நான் இதுவரை விளையாடியவற்றில் மிக மோசமான டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளேன். இது எனக்கு ஒரு மோசமான போட்டி. நான் என் சிறந்த அளவுக்கு கூட விளையாடவில்லை" என குறிப்பிட்டார்.   

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்